/உள்ளூர் செய்திகள்/தேனி/ மழையால் அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு மழையால் அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மழையால் அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மழையால் அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மழையால் அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 28, 2024 12:08 AM

போடி: கேரளா, குரங்கணி பகுதியில் பெய்து வரும் கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது.
போடி பகுதியில் மழை இன்றி கொட்டகுடி ஆறு வறண்டு இருந்தது. கடந்த மூன்று நாட்களாக கேரளா, குரங்கணி பகுதியில் கனமழை பெய்தது. போடி, தர்மத்துப்பட்டி, சிலமலை உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து இரவில் சாரல் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக கேரளா, குரங்கணி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து வரத்து ஏற்பட்டது. இதனையொட்டி போடி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர்வரத்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை தாண்டி நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், மக்களும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.