/உள்ளூர் செய்திகள்/தேனி/ குளிரூட்டும் கோடவுன் அமைக்க விண்ணப்பிக்கலாம் குளிரூட்டும் கோடவுன் அமைக்க விண்ணப்பிக்கலாம்
குளிரூட்டும் கோடவுன் அமைக்க விண்ணப்பிக்கலாம்
குளிரூட்டும் கோடவுன் அமைக்க விண்ணப்பிக்கலாம்
குளிரூட்டும் கோடவுன் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 28, 2024 12:09 AM
தேனி: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் மாவட்டத்தில் 6 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டும் கோடவுன் அமைக்கப்பட உள்ளது. இதில் விளைபொருட்களை சீரான வெப்பநிலையில் நீண்ட நாட்கள் வைத்திருக்க பயன்படுகிறது.
இங்கு பொருட்களை சேமித்து வைத்து விலை உயரும் நேரத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம். 6 டன் கொள்ளவு கொண்ட குளிரூட்டும் கோடவுன் அமைக்க அதிகபட்சம் ரூ.8.75 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. பயனடைய விரும்பும் விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தத நேரில் அணுகி விபரங்களை தெரிந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.