ADDED : ஜூன் 13, 2024 06:52 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் துவக்கவிழா கொண்டாடப்பட்டது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் லட்சுமணன், இணைச்செயலாளர் ஜனார்த்தனன், மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் வசந்தா வரவேற்றார். விழாவில் உறவின்முறை, பள்ளி நிர்வாகிகள் மாணவிளுக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்துக்கள் கூறினர். மாணவிகள், பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.