/உள்ளூர் செய்திகள்/தேனி/ தன்னம்பிக்கையுடன் படித்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகவல் தன்னம்பிக்கையுடன் படித்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகவல்
தன்னம்பிக்கையுடன் படித்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகவல்
தன்னம்பிக்கையுடன் படித்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகவல்
தன்னம்பிக்கையுடன் படித்தால் 'நீட்' தேர்வில் சாதிக்கலாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தகவல்
ADDED : ஜூன் 07, 2024 06:47 AM

தேனி: தன்னம்பிக்கையுடன் படித்தால் 'நீட்'தேர்வில் சாதிக்கலாம் என நீட் தேர்வில் 720க்கு 684 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீபிகா தெரிவித்தார்.
மருத்துவபடிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த மாணவி 671 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர் தேனி வேலம்மாள் பள்ளியில் பிளஸ் 2 சி.பி.எஸ்.சி.,யில் பயோ மேக்ஸ் பாடப்பிரிவில் படித்தார்.
பிளஸ்2 பொது தேர்வில் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்றார். பெற்றோர் கணேசன், லட்சுமிதேவி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
நீட் தேர்வில் சாதித்தது குறித்து மாணவி கூறுகையில், 'நீட் தேர்விற்காக 10 மாதங்களாக கவனம் செலுத்தி படித்தேன்.
பள்ளியில் படிப்பதை தவிர வீட்டில் 4 மணிநேரம் படிப்பதில் கவனம் செலுத்தினேன். பழைய வினாத்தாள்களை பயிற்சி செய்தேன். வினாக்களுக்கு தவறான விடை அளித்தால் அதனை ஆசிரியர்கள் மூலம் மீண்டும் அந்த வினாக்களுக்கு சரியான விடையை எழுதி படிப்பேன்.
தேர்வினை தன்னம்பிக்கையுடனும், பயமின்றி எழுதினேன். நன்றாக பயிற்சி செய்திருந்ததால் நல்ல மதிப்பெண் வரும் என நம்பிக்கையுடன் இருந்தேன் என்றார்.
ஆண்டிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த சிவக்குமார், நித்யா தம்பதியினரின் மகன் தாரகேஷ் கூறியதாவது, வேலம்மாள் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பயோ மேக்ஸ் பிரிவில் படித்து பிளஸ் 2 தேர்வில் 500க்கு 469 மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளியில் பொதுத்தேர்விற்கு தயாராகும் போதே 'நீட்' தேர்விற்கும் தயாரானேன். பள்ளி, வீட்டில் தேர்விற்கு தயாராவதில் கவனம் செலுத்தினேன். வேதியியல், இயற்பியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தேன்.
தொடர்ந்து படித்தாலும் மனசேர்வு ஏற்படாமல் இருக்க ரிலாக்ஸ் செய்து கொள்வேன். பயமின்றி நீட்தேர்வினை எழுதினேன். இதில் 671 மதிப்பெண்கள் பெற்றேன்.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ படிப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளேன். என்றார்.
நீட்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் செல்வி, ஆசிரியர்கள் பாராட்டினர்.