ADDED : ஜூன் 07, 2024 06:48 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் புள்ளிமான்கோம்பை ஊராட்சி ராஜப்பன்கோட்டையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் ராஜப்பன்கோட்டை ஆர்.பி.கே.சி.சி., மற்றும் ஸ்பார்ட் 11 அணியும் நடுகோட்டை ஸ்டார் வாரியர் அணியும் விளையாடினர்.
இதில் நடுகோட்டை ஸ்டார் வாரியர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், கோப்பையை ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் சார்பில் விளையாட்டு மேம்பாட்டு அணி தேனி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா வழங்கினார். ராஜப்பன்கோட்டை அணிக்கு 2ம் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பையை, புள்ளிமான்கோம்பை ஊராட்சி தலைவர் தவசி, துணைத்தலைவர் நாகராஜன் வழங்கினர்.
பி.புதூர் பி.எம்.டி., அணிக்கு 3ம் பரிசாக ரூ.3000 மற்றும் கோப்பை வக்கீல் சுரேஷ் சார்பில் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கமல் செய்திருந்தார்.