Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிட்டுக்குருவிகள், மைனாக்கள் தங்கிச் செல்லும் அரசு பள்ளி பசுமை வளாகம்

சிட்டுக்குருவிகள், மைனாக்கள் தங்கிச் செல்லும் அரசு பள்ளி பசுமை வளாகம்

சிட்டுக்குருவிகள், மைனாக்கள் தங்கிச் செல்லும் அரசு பள்ளி பசுமை வளாகம்

சிட்டுக்குருவிகள், மைனாக்கள் தங்கிச் செல்லும் அரசு பள்ளி பசுமை வளாகம்

ADDED : ஜூன் 03, 2024 03:54 AM


Google News
Latest Tamil News
பள்ளிகளில் அதிக ஆக்சிஜன் தரும் மரக்கன்றுகள், செடிகளை வளர்ப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வில் ஈடுபடுவது அவசியம் என வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இங்கு 470க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பசுமை வடுகை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் செல்வராஜ், உறுப்பினர்கள் முயற்சியில் பள்ளி வளாகத்தில் புங்கன், ஆலமரம், அரசமரம், வேம்பு மரங்களின் தினமும் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள், மைனாக்கள் வந்து தங்குகின்றன.

பறவைகளுக்கு பெட்டிகளில் தினமும் திணை, கேழ்வரகு உட்பட சிறுதானியங்கள், 4 குடிநீர் டப்பாக்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன.

பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படும் புங்கன், ஆலமரம், அரசமரம், வேம்பு, வாகை, சவுக்கு உட்பட நுாற்றுக்கும்் அதிகமான மரங்கள் செழுமையாக வளர்ந்துள்ளன. பள்ளி விடுமுறை நாட்களிலும் கூட கோடை வெயிலில் செடி, மரம் தண்ணீர் காய்ந்து விடாமல் தடுக்க சிறிய அளவில் பாத்தி கட்டி 24 மணி நேரமும் அனைத்து மரங்கன்றுகளுக்கும் தண்ணீர் செல்கிறது.

சிட்டுக்குருவி தின விழா:


பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது: மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்திற்கு இணையாக இயற்கையின் மீது ஆர்வம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியில் பசுமை படை, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இங்குள்ள தாவரங்களுக்கு மண்புழு உரம், இயற்கை உரமிட்டு நீர் பாய்ச்சி மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடுகின்றனர். அப்போது பள்ளியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கும்., என்றார்.

விதை பந்து, காய்கறிகள் தயாரிப்பு:


சின்னராஜா, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி: பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் கல்வி அறிவை தாண்டி, இயற்கையை நேசிப்பதை கற்று கொடுக்கிறோம்.

விதைப்பந்து செய்முறை பயிற்சியுடன் சூழல் பாதுகாப்பு மரங்கன்றுகளை வளர்ப்பது குறித்தும் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறோம்.

பள்ளியில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அசோக்குமார், ஆசிரியர்கள் மேற்பார்வையில் மரக்கன்றுகள் நடுவது, காய்கறி தோட்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன., என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us