/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பத்தில் கழிவுநீர் ஓடையான தெரு பயன்படுத்தாமல் தவிர்க்கும் பொது மக்கள் கம்பத்தில் கழிவுநீர் ஓடையான தெரு பயன்படுத்தாமல் தவிர்க்கும் பொது மக்கள்
கம்பத்தில் கழிவுநீர் ஓடையான தெரு பயன்படுத்தாமல் தவிர்க்கும் பொது மக்கள்
கம்பத்தில் கழிவுநீர் ஓடையான தெரு பயன்படுத்தாமல் தவிர்க்கும் பொது மக்கள்
கம்பத்தில் கழிவுநீர் ஓடையான தெரு பயன்படுத்தாமல் தவிர்க்கும் பொது மக்கள்
ADDED : ஜூன் 03, 2024 03:53 AM

கம்பம்: கம்பம் நகரில் ஒரு தெருவே கழிவு நீர் ஓடையாக மாறியுள்ளதால் பொது மக்கள் அத்தெருவை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ளனர்.
நகராட்சியின் விரிவாக்க பகுதிகள் அதிகரித்துள்ளன. இங்குள்ள வார்டு 31 ல் ஆங்கூர் பாளையம் ரோட்டில் உள்ளது சீதாராமைய்யர் தெரு.
இத்தெரு வழியாக சென்றால் குமுளி நெடுஞ்சாலையை அடையலாம். அதாவது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரில் உள்ள மெயின் ரோட்டிற்கு சென்றுவிடலாம்.
பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த இத்தெருவில் சமீப காலமாக பொது மக்கள் நடமாட்டம் இல்லை.
இந்த வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ள வீடுகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சாக்கடை கட்டப்படாததால் வீதியில் பெருக்கெடுத்து ஓடி, தேங்கியுள்ளது.
இவ்வாறு ஒரு தெருவே சாக்கடையாக மாறி விட்டது. எனவே இத்தெருவில் நடந்தும், டூ வீலர்களில் செல்வோரும், தற்போது இத்தெரு வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் சாக்கடை கழிவு நீர் தெரு நெடுகிலும் குளம் போல் தேங்கியுள்ளது.
ஆங்கூர் பாளையம் ரோட்டில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
நகராட்சி கமிஷனரும், சுகாதார அலுவலரும் எதையும் கண்டு கொள்வது இல்லை. இத்தெருவில் சாக்கடை கட்டமைப்பை முறைப்படி கட்டி, கழிவுநீரை கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.