/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜூன் 10 முதல் 30 வரை இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 முதல் 30 வரை இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூன் 10 முதல் 30 வரை இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூன் 10 முதல் 30 வரை இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூன் 10 முதல் 30 வரை இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 01, 2024 05:24 AM
தேனி: கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளது.
மாவட்டத்தில் ஒரு லட்சத்து 1310 பசுக்கள், 490 எருமை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோமாரிஇந்நோய் பாதித்தால் கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உட்கொள்ளாமல் மந்த நிலையில் இருக்கும், அசை போடாது பால் உற்பத்தி குறைவது, வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நுால் போல ஒழுகிய வண்ணம் இருப்பது முக்கிய அறிகுறிகளாகும். இதனை தவிர்க்க கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவது அவசியம்.
மாவட்டத்தில் 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை உதவி டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுககள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
இக்குழுக்கள் ஜூன் 10 முதல் 30 வரை 21 நாட்களுக்கு 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசியினை இலவசமாக செலுத்த உள்ளனர்.
தடுப்பூசி குறித்து உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.