ADDED : ஜூன் 22, 2024 05:47 AM
கூடலுார்: லோயர்கேம்ப் குருவனத்துப் பாலம் அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார்.
இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால் முகம் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. லோயர்கேம்ப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.