/உள்ளூர் செய்திகள்/தேனி/ மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அமல்படுத்த எதிர்பார்ப்பு: கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பு மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அமல்படுத்த எதிர்பார்ப்பு: கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பு
மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அமல்படுத்த எதிர்பார்ப்பு: கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பு
மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அமல்படுத்த எதிர்பார்ப்பு: கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பு
மத்திய அரசின் ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டம் அமல்படுத்த எதிர்பார்ப்பு: கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பு
ADDED : ஜூன் 01, 2024 05:18 AM
கிராமங்களில் வேளாண் மின் இணைப்புகளும், குடியிருப்பு மின் இணைப்புகளும் ஒரே டிரான்ஸ்பார்மர் மூலம் வழங்கப்படுகிறது. வேளாண் இணைப்புகளுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின் வினியோகம் இருக்கும். குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் சப்ளை இருக்க வேண்டும். ஒரே டிரான்ஸ்பார்மர் என்பதால் வேளாண் இணைப்புகளுக்கு சப்ளையை நிறுத்தும் போது, குடியிருப்புகளுக்கும் சப்ளையை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதை தவிர்க்க மத்திய அரசு ஆர்.டி.எஸ்.எஸ் ( Revamped Service Sector Scheme ) என்ற திட்டத்தை அறிவித்தது. இது 2021 முதல் 2026 வரை ஐந்தாண்டு திட்டமாகும். மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 758 கோடி இந்த திட்டத்திற்கென மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தான் பிரிபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் 20 கோடியே 46 லட்சம் மீட்டர்களும், பீடர்களுக்கான மீட்டர்கள் 1 கோடியே 98 லட்சம் மீட்டர்களும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் டிரான்ஸ்பார்மர்களில் உள்ள வேளாண் மற்றும் குடியிருப்பு இணைப்புகளை தனித் தனியாக பிரித்து மின் சப்ளை வழங்க உதவும் இந்த திட்டப் பணிகள் தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பல மாநிலங்களில் இந்த திட்டத்தின்கீழ் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை.
மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, தேர்தலுக்கு முன் பணிகளை துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணிகள் துவங்க வில்லை. நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டவுடன் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. 2026 வரை காலக்கெடு இருப்பதால், பணிகளை துவக்கி முடிப்பதில் பிரச்னை இருக்காது என்கின்றனர். இதன் மூலம் கிராமப்புற குடியிருப்புகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். என்றனர்.