ADDED : ஜூலை 26, 2024 12:18 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில், 'மேக்கிழார்பட்டி நாட்டாண்மை ராமகிருஷ்ணன் மீது கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டதாக கூறி வழக்கு பதிந்து, அவரை ஆண்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். தர்ணாவில் மாநில துணை பொது செயலாளர் பாலசுந்தரராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கலைச்செல்வன், வேல்மணி, ராஜா, முருகன், அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.