/உள்ளூர் செய்திகள்/தேனி/ மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 12:18 AM

பெரியகுளம் : தி.மு.க., அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியகுளம் மின் வாரிய நகர் பிரிவு அலுவலகம் அருகே தி.மு.க., அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
தாலுகா செயலாளர் வெண்மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பேசினர். மின் நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்வதை தமிழக அரசு ஏற்க கூடாது. உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். நிர்வாகிகள் ராமர், மன்னர் மன்னன், கணேசன், காளிச்சாமி, சுப்ரமணி, நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி: - தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் பொன்னுதுரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், முருகன், தாலுகா செயலாளர் தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் ஏ.சி.காமுத்துரை, பாஸ்கரன், எம்.காமுத்துரை, முத்துக்குமார், கிளைச் செயலாளர்கள், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் தனலட்சுமி, மூத்த கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.