ADDED : ஜூன் 03, 2024 03:50 AM
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி தாலுகாச் செயலாளர் தர்மர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக்கோரி கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் அண்ணாமலை, நிர்வாகிகள் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். போஸ், ராஜப்பன், ராஜா, ராமசந்திரன், எஸ்.எப்.ஐ., நிர்வாகிகள் முனிஸ்வரன், வேல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.