/உள்ளூர் செய்திகள்/தேனி/ நோய் எதிர்ப்பு புரத நிலை அறிய மீண்டும் சர்வே நடத்த முடிவு நோய் எதிர்ப்பு புரத நிலை அறிய மீண்டும் சர்வே நடத்த முடிவு
நோய் எதிர்ப்பு புரத நிலை அறிய மீண்டும் சர்வே நடத்த முடிவு
நோய் எதிர்ப்பு புரத நிலை அறிய மீண்டும் சர்வே நடத்த முடிவு
நோய் எதிர்ப்பு புரத நிலை அறிய மீண்டும் சர்வே நடத்த முடிவு
ADDED : ஜூலை 05, 2024 05:30 AM
கம்பம்: பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு புரதங்கள் எந்த அளவிற்கும் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள சுகாதாரத்துறை சர்வே நடத்த முடிவு செய்துள்ளது.
கடந்த 2019 ல் கொரோனோ வேகமாக பரவியது. தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்த போதும் உயிரிழப்புகளை தவிர்க்க இயலவில்லை. தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 2021 ல் உடலில் நோய் எதிர்ப்பு புரதங்கள் ( ஆண்டிபாடிஸ் ) எந்த அளவுக்கு உள்ளன என்று மாநிலம் முழுவதும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. தற்போது புதிய வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்புக்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா போன்றே பரவும் முறை, உறுப்புகள் பாதிப்பு இருக்கலாம் என்பதால் , மீண்டும் தமிழகம் முழுவதும் அனைவரிடமும் நோய் எதிர்ப்பு புரதங்கள் உடம்பில் எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ரேண்டம் முறையில் ஆங்காங்கே ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குறிப்பிட்ட சில கிராமங்களில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் குறைந்தது நூறு பேர்களிடம் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.