/உள்ளூர் செய்திகள்/தேனி/ அம்மாபட்டி -- டொம்புச்சேரி ரோட்டில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் அபாயம் அம்மாபட்டி -- டொம்புச்சேரி ரோட்டில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் அபாயம்
அம்மாபட்டி -- டொம்புச்சேரி ரோட்டில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் அபாயம்
அம்மாபட்டி -- டொம்புச்சேரி ரோட்டில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் அபாயம்
அம்மாபட்டி -- டொம்புச்சேரி ரோட்டில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 06:39 AM

போடி : போடி அம்மாபட்டி - டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் வைரவன் கண்மாய் தடுப்புச் சுவர் சேதம் அடைந்து சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
போடியில் இருந்து மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் வழியாக டொம்புச்சேரி செல்வதற்கு ரோடு, பஸ் வசதி உள்ளது. அம்மாபட்டியில் இருந்து டொம்புச்சேரி செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் மக்கள் ஒரு கி.மீ., தூரம் நடந்து மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் செல்ல வேண்டும். அங்கு இருந்து டொம்புச்சேரிக்கு பயணம் செய்ய வேண்டியது உள்ளது. மாற்றுப் பாதையாக அம்மாபட்டியில் இருந்து நேரடியாக டொம்புச்சேரி செல்ல ரோடு வசதி உள்ளது. ஆனால் பஸ் வசதி இல்லை. இதனால் மக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். அம்மாபட்டியில் இருந்து மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் வழியாக டொம்புச்சேரிக்கு சுற்றிச் செல்லாமல் நேரடியாக செல்வதன் மூலம் 4 கி.மீ., தூரம் குறைகிறது.
அம்மாபட்டி - டொம்புச்சேரி ரோட்டில் வைரவன் கண்மாய் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கன மழையால் ரோட்டோரம் உள்ள வைரவன் கண்மாய் தடுப்புச் சுவர் சேதம் அடைந்து பெரும் பள்ளமாக மாறி உள்ளது. சேதம் அடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் விவசாயிகள் விளை பொருட்களை டூவீலர், லாரி, டிராக்டர் மூலம் கொண்டு செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். இரவில் இந்த ரோட்டில் விளக்கு வசதி இல்லாததால் வாகனங்களில் செல்லும் போது, சேதம் அடைந்த பள்ளம் தெரியாத நிலையில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.