ADDED : ஜூலை 19, 2024 06:40 AM

தேனி : கலெகடர் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில்,
'உதவித்தொகை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி யாசகம் பெற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருப்பாளர் வெண்மி, துணை ஒருங்கிணைப்பாளர் ரெங்கேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.