Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வீரப்ப அய்யனார் மலை கோயிலில் கொடிமரம், நந்தி மண்டபம் பிரதிஷ்டை

வீரப்ப அய்யனார் மலை கோயிலில் கொடிமரம், நந்தி மண்டபம் பிரதிஷ்டை

வீரப்ப அய்யனார் மலை கோயிலில் கொடிமரம், நந்தி மண்டபம் பிரதிஷ்டை

வீரப்ப அய்யனார் மலை கோயிலில் கொடிமரம், நந்தி மண்டபம் பிரதிஷ்டை

ADDED : ஜூன் 17, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
தேனி : தேனி அல்லிநகரம் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக் கோயிலில் கொடிமரம், நந்தி மண்டபம் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது.

இம்மலைக்கோயில் வளாகத்தில் நந்திமண்டபம், கொடிமரம் புதிதாக அமைக்கப்பட்டது. ஜூன் 13ல் காலை கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை விழா துவங்கியது. தொடர்ந்து முதற்கால வேள்வி, ஜூன் 14ல் இரண்டாம் கால வேள்வி, ஜூன் 14ல் 3ம் கால வேள்வி, என நேற்று காலை வரை 6 கால வேள்வி பூஜைகள் நடந்தன. வேள்வி நடந்த நாட்களில் தினமும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை நந்தி மண்டபம், கொடிமரத்த்திற்கு பிரதிஷ்டை விழா நடந்தது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நந்தீஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி, அல்லிநகரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் விழாவில் பங்கேற்று, வீரப்ப அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ரத்தினம் பஸ் சர்வீஸ் உரிமையாளர் சுந்தரவடிவேல், ரத்தினம் ஆர்த்தோ சென்டர் டாக்டர் ராஜமணிகண்டன், தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மருதுபாண்டி, வி.ஏ.ஓ., ஜீவானந்தம், ஹிந்து சமய அறநிலைத்துறை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் தியாகராஜன், கார்த்திகேயன், செயல் அலுவலர்கள் ஹரிஸ்குமார், சுந்தரி, அல்லிநகரம் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராமக்கமிட்டியார்கள், சிவனடியார் திருக்கூட்டத்தினர் இணைந்து செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us