/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாலுக்கு கூடுதல் விலை கிடைத்தும் எருமை வளர்ப்பு தவிர்ப்பு பாலுக்கு கூடுதல் விலை கிடைத்தும் எருமை வளர்ப்பு தவிர்ப்பு
பாலுக்கு கூடுதல் விலை கிடைத்தும் எருமை வளர்ப்பு தவிர்ப்பு
பாலுக்கு கூடுதல் விலை கிடைத்தும் எருமை வளர்ப்பு தவிர்ப்பு
பாலுக்கு கூடுதல் விலை கிடைத்தும் எருமை வளர்ப்பு தவிர்ப்பு
ADDED : ஜூலை 13, 2024 05:16 AM
கம்பம் : பசும் பாலை காட்டிலும் எருமை பாலுக்கு அதிக விலை கிடைத்தும் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் மாவட்டத்தில் எருமை இனம் அழியும் நிலை உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக பால் கறக்க வேண்டும் என்பதற்காக ஜெர்சி இன பசுக்கள் வளர்க்கின்றனர். ஆனால் எருமை மாடுகள் வளர்ப்பதை தவிர்க்கின்றனர். இதற்கு காரணம் எருமை மாடுகளுக்கு அதிக தீவனம், தினசரி குளியல், குடிக்கவும் அதிக தண்ணீர் தேவைப்படும். பால்கறப்பதும் குறைவாகும். பசுக்களுக்கு இது போன்று தேவையில்லை. பசுக்கள் சராசரியாக 15 லிட்டர் பால் வரை கறக்கும். ஆனால் எருமைகள் அதிகபட்சம் 5 முதல் 7 லிட்டர் வரை மட்டுமே கறக்கும்.
ஆனால் எருமை பாலுக்கு ஆவினும், தனியார் வியாபாரிகளும் கூடுதல் விலைக்கு வாங்குகின்றனர். எருமை பாலில் அதிக கொழுப்பு சத்து உள்ளதால் அதிக தண்ணீர் கலந்தாலும் தெரியாது. ஆனால் பசும்பாலில் அதிகமாக தண்ணீர் கலக்க முடியாது. இருந்த போதும் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் பால் உற்பத்தியாளர்கள் எருமை மாடு வளர்ப்பதை தவிர்த்தனர். இதன் விளைவு எருமை இனமே இல்லாத நிலை உருவாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் அதிகபட்சம் 2 ஆயிரம் எருமைகள் மட்டுமே இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்களிடம் கேட்டதற்கு, தேனி மாவட்டத்தில் எருமை இனம் அழிந்து வர காரணம் பராமரிப்பு செலவுகள் தான். தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் எருமை அதிகமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் இந்த நிலை. விலையில்லா பசு மாடுகள் கொடுத்த போது, எருமை மாடுகளும் வழங்கலாம்'' என்றனர். அழிந்து வரும் எருமை இனத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.