ADDED : ஜூலை 20, 2024 12:21 AM

கூடலுார்:-
கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆராதனை நடந்தது.
ஏராளமான பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வீருகண்ணம்மாள் கோயிலில் ஆடி வெள்ளி முதல் வார பூஜையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. லோயர்கேம்ப் பளியன்குடி மங்களநாயகி கண்ணகி கோயிலில் ஆடி வெள்ளி முதல் வார சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.