/உள்ளூர் செய்திகள்/தேனி/ கொலை முயற்சி வழக்கு: ஏழு ஆண்டுகள் சிறை கொலை முயற்சி வழக்கு: ஏழு ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கு: ஏழு ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கு: ஏழு ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கு: ஏழு ஆண்டுகள் சிறை
ADDED : ஜூலை 10, 2024 05:21 AM

தேனி : கடன் வாங்கியவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ஈஸ்வரனுக்கு 40, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கம்பம் மிராண்டா தெரு லாரி உரிமையாளர்கிருஷ்ணமூர்த்தி. இவரது அலுவலகத்தில் கோம்பை ரோட்டை சேர்ந்த அய்யர் 46, பணிபுரிந்தார். இவர் 2014ல் அதேப்பகுதி ஜல்லிகட்டு தெரு ஈஸ்வரனிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்று மாதந்தோறும் வட்டி செலுத்தினார். 6மாதம் வட்டி செலுத்தவில்லை. இதனால் வட்டியுடன் ரொக்கத்தை சேர்த்து தருமாறு ஈஸ்வரன், அய்யரிடம் கேட்டார். பணம் தராததால் ஈஸ்வரனின் தந்தை ராஜா 74, தாய் பஞ்சம்மாள் 69, துாண்டுதலில் ஈஸ்வரன் லாரி அலுவலகம் முன் நின்றிருந்த அய்யரை, கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்டவர் புகாரில், 2014 செப்., 9ல் ஈஸ்வரன், தந்தை ராஜா, தாய் பஞ்சம்மாள் உட்பட மூவரையும் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு உத்தமபாளையம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
தாய், தந்தை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். நீதிபதி சிவாஜி செல்லையா, கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளி ஈஸ்வரனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த தீர்ப்பளித்தார்.