ADDED : ஜூன் 01, 2024 05:19 AM
தேனி: மத்திய அரசு சார்பில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின் விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மனிதர்களை மீட்டவர்களுக்கு 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷ பதக்க விருதுகள் வழங்கப்பட உள்ளது. மனிதர்களை காப்பற்றியவர்கள் விருதுக்கு https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
3 நகல்களை ஜூன் 28 மாலை 4:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.