/உள்ளூர் செய்திகள்/தேனி/ வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 16, 2024 05:19 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேளாண் துறையினர் கூறியதாவது: இளைஞர்கள் வேளாண், வேளாண் சார்ந்த பொருட்களை மூலதனமாக கொண்டு அனுமதிக்க கூடிய சுய தொழில்கள் துவங்கலாம்.
இது பிரதமர் உணவுப்பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உடகட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாக இருத்தல் வேண்டும். இது தொடர்பான விவரங்களை https://agriinra.dac.gov.in, https://pmfme.mofpi.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் 21 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே விண்ணபிக்க இயலும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் AGRISNET என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் நகலை உரிய ஆவணங்களோடு வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கலெக்டர் தலைமையிலான அனுமதிக்குழு தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடன் தொகையில் மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றனர்.