ADDED : ஜூன் 16, 2024 05:20 AM
கடமலைக்குண்டு: பொங்கல் விழாவில் தகராறு செய்த 9 பேர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மராஜபுரம் காளியம்மன் கோயில் பொங்கல் விழா, கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட பிரச்னையில் கிராமத் தலைவரான தர்மராஜ் என்பவருடன் தகராறு செய்து சிலர் அசிங்கமாக பேசி உள்ளனர்.
இது குறித்து தர்மராஜ் புகாரில் தர்மராஜபுரத்தைச் சேர்ந்த தவசி, ராமன், லட்சுமணன், முரசு, சூர்யா, விக்னேஷ், ராமர், சண்டிவீரன், சிவாஸ் ஆகிய 9 பேர் மீது கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.