/உள்ளூர் செய்திகள்/தேனி/ அம்மச்சியாபுரம், குன்னுார் இணைப்பு கண்மாய்க்கரையில் ரோடு அவசியம் அம்மச்சியாபுரம், குன்னுார் இணைப்பு கண்மாய்க்கரையில் ரோடு அவசியம்
அம்மச்சியாபுரம், குன்னுார் இணைப்பு கண்மாய்க்கரையில் ரோடு அவசியம்
அம்மச்சியாபுரம், குன்னுார் இணைப்பு கண்மாய்க்கரையில் ரோடு அவசியம்
அம்மச்சியாபுரம், குன்னுார் இணைப்பு கண்மாய்க்கரையில் ரோடு அவசியம்
ADDED : ஜூன் 04, 2024 06:04 AM

ஆண்டிபட்டி : அம்மச்சியாபுரம், குன்னூர் ஊராட்சிகளை இணைக்க செங்குளம் கருங்குளம் கண்மாய்க்கரை வழியாக ரோடு வசதி உள்ளது.
கடந்த 30 ஆண்டுக்கு முன் கண்மாய்க்கரையில் அமைக்கப்பட்ட இந்த ரோட்டை விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்துகின்றனர். 26 அடி அகலமான இந்த ரோட்டில் விளைபொருட்களை கொண்டு செல்ல வாகனங்கள் சென்று வந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத இந்த ரோடு தற்போது பாதி அளவாக சுருங்கி விட்டது. மழை பெய்தால் சகதியாகி நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளது.
ரோட்டில் இருபுறமும் வளர்ந்துள்ள செடி கொடிகள் புதர் போல ரோட்டை மறைத்து நிற்கின்றன.
ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறும் இப்பகுதியில் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அம்மச்சியாபுரம் ஊராட்சி வாய்க்கால்பட்டியில் துவங்கும் ரோடு கருங்குளம், செங்குளம் கண்மாய்க்கரை வழியாக குன்னூர் ஊராட்சி டோல்கேட் அருகே தேனி ரோட்டில் இணைகிறது.
2 கி.மீ., தூரமுள்ள இந்த ரோட்டை தார் ரோடாக மாற்றுவதற்கு இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.