/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் கண் துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றலால் வாகன ஓட்டிகள் அவதி சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள் தேனியில் கண் துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றலால் வாகன ஓட்டிகள் அவதி சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்
தேனியில் கண் துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றலால் வாகன ஓட்டிகள் அவதி சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்
தேனியில் கண் துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றலால் வாகன ஓட்டிகள் அவதி சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்
தேனியில் கண் துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றலால் வாகன ஓட்டிகள் அவதி சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்
ADDED : ஜூலை 30, 2024 06:22 AM

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்ட் முதல் கலெக்டர் அலுவலக ரோட்டில் நடந்த கண்துடைப்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
தேனியில் ரயில்வே மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேனி-மதுரை, மதுரை- தேனி ரோட்டில் இயக்கப்படும் பஸ்கள், இலகுரக வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு ஐ.டி.ஐ., அருகே அமைக்கப்பட்டுள்ள திட்ட சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இந்த ரோட்டில் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த ரோட்டில் போக்குவரத்து இடையூறு அதிகம் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டிருந்தார்.
நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் உதவியுடன் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகளை பெயரளவில் அகற்றினர்.
அதிகாரிகள் சென்றதும் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. சில கடைகாரர்கள் கடைமுன் வாகனங்கள் நிறுத்தியும், கற்கள் வைத்தும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
கலெக்டர் அலுவலக ரோட்டில் பெட்ரோல் பங்க் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது.
ரோட்டில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும்.