/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது ரூ.2.13 லட்சம் மீட்பு, கார்கள் பறிமுதல் தேனி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது ரூ.2.13 லட்சம் மீட்பு, கார்கள் பறிமுதல்
தேனி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது ரூ.2.13 லட்சம் மீட்பு, கார்கள் பறிமுதல்
தேனி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது ரூ.2.13 லட்சம் மீட்பு, கார்கள் பறிமுதல்
தேனி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது ரூ.2.13 லட்சம் மீட்பு, கார்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 09, 2024 09:11 PM

தேனி:தேனியில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பவுன்ராஜிடம் ரூ.2.26 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் சோலைத்தேவன்பட்டி அபினேஷ் 22, தாடிச்சேரி சூர்யன் 29, மணிமுத்து 30, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஹரிஹரன் 24, ஸ்ரீநாத் 27, சுந்தரமூர்த்தி 21, மணிகண்டன் 32 ஆகிய ஏழு பேரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்து ரூ.2.13 லட்சம், 2 கார்கள், டூவீலர்களை பறிமுதல் செய்யதனர்.
தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பவுன்ராஜ் 52. இவர் பாலகிருஷ்ணாபுரத்தில் டாஸ்மாக கடை மேற்பார்வையாளர் தினமும் பணி முடிந்து வசூலான பணத்தை எடுத்துச் சென்று, மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். மார்ச் 10 இரவு 11:00 மணிக்கு ரூ.2,26,680 பணத்துடன் கோடாங்கிபட்டி தேவர் சிலை அருகே வீட்டிற்கு நடந்து சென்றார். டூவீலரில் வந்த இருவர், பவுன்ராஜை தள்ளிவிட்டு, பணப்பையை பறித்துச் சென்றனர்.
பையில் பாயின்ட் ஆப் சேல் கருவி, அலைபேசியும் இருந்தது. பவுன்ராஜ் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ., க்கள் பாலசுப்பிரமணியம், செல்லத்துரை, சம்சுதீன், பயிற்சி எஸ்.ஐ., அஜய்சர்மா கொண்ட குழுவினர் வழிப்பறி கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட அபினேஷ், உடைந்தயாக இருந்த மணிமுத்து, சூர்யனை மார்ச் 18ல் கைது செய்து, கார், டூவீலர், ரூ.1.68 லட்சத்தை கைப்பற்றினர். அவர்களின் வாக்குமூலத்தின் படி பட்டுக்கோட்டையை சேர்ந்த ஹரிஹரனை 24, ஏப்., 8ல் கைது செய்தனர். 3 நாட்களுக்கு முன் வாடகை காரின் பதிவு எண்ணை மாற்றி, தேனி அரண்மனைப்புதுார் முல்லை நகரில் திருட வந்த தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ஸ்ரீநாத், சுந்தரமூர்த்தி, மணிகண்டனை கைது செய்து, கார், பணம் ரூ.45 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பட்டுக்கோட்டை கார்த்திகை போலீசார் தேடி வருகின்றனர். பழனிசெட்டிபட்டி போலீசாரை தேனி எஸ்.பி., சிவபிரசாத் பாராட்டினார்.