ADDED : ஜூலை 25, 2024 05:03 AM
ஆண்டிபட்டி,: டி.பொம்மிநாயர்கன்பட்டி பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
டி.பொம்மிநாயக்கன்பட்டி ஊருக்கு தெற்கே முனியாண்டி கோயில் ஓடையில் சிலர் டிராக்டரில் செம்மண் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த குட்டிராஜா 19, சரவணகுமார் 22, என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் டிரைலரை கைப்பற்றினர். டிராக்டர் உரிமை யாளர் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த முனிஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.