ADDED : ஜூலை 25, 2024 05:04 AM
கடமலைக்குண்டு: கண்டமனூர் எஸ்.ஐ., மலைச்சாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். ராஜேந்திரா நகரில் ரோட்டில் சாக்குப்பை பொட்டலங்களுடன் சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பண்டல்கள் 25, விமல் பாக்கு 41 பண்டல், மசாலா பாக்கு 39 பண்டல் என மொத்தம் ஒன்பது கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதும், விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
விசாரணையில் பிடிபட்ட நபர் ராஜேந்திரா நகரை சேர்ந்த அய்யனார் 42, என்பதும் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.