/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு தேனி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு
தேனி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு
தேனி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு
தேனி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:50 AM

தேனி: லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டன.
தேனி லோக்சபாவில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), கம்பம், போடி, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான்(தனி) சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. தொகுதியில் உள்ள 1788 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 25 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் , ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவிற்கு பின் இயந்திரங்கள் கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் முடிந்தது.தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டு பதிவு இயந்திரங்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டன. தேனியில் 2450 ஓட்டுபதிவு இயந்திரம், தலா 1225 வி.வி.பேட், கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 1126 ஓட்டுபதிவு இயந்திரம், தலா 563 கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.