போடி, : போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன் 55.
இவர் தேனி மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகை செல்வி 40, மூன்று குழந்தைகள் உள்ளனர். முருகனின் தாயார் லட்சுமி 95,யை வேறுவீடு பார்த்து தங்க வைக்குமாறு உறவினர்களிடம் கார்த்திகை செல்வி கூறியுள்ளார். இதற்கு உறவினர்கள் கார்த்திகை செல்விக்கு அறிவுரை கூறி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கார்த்திகை
செல்வி வீட்டில் ஆட்கள் இல்லாத போது நேற்று முன் தினம் தூக்கு மாட்டி உள்ளார். உயிருக்கு போராடியவரை உறவினர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.