ADDED : மார் 18, 2025 01:12 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜபருல்லா, 61; தச்சு தொழிலாளி.
இவர், 14ம் தேதி, தன் வீட்டின் அருகே விளையாடிய 9 வயது சிறுவனை, வாயை பொத்தி, பாலியல் தொல்லை அளித்துள்ளார். சிறுவனிடம், 'இதை வெளியே சொன்னால், கத்தியால் கழுத்து அறுத்து விடுவேன்' என, மிரட்டி உள்ளார்.
சிறுவன் யாரிடமும் சொல்லாமல், இரண்டு நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். சிறுவனின் தாய், சந்தேகமடைந்து, விசாரித்த போது, சிறுவன் நடந்த சம்பவத்தை தாயிடம் கூறியுள்ளார். சிறுவனின் பெற்றோர் புகாரில், திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், ஜபருல்லாவை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.