Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் இளையராஜா மனமுருகி தரிசனம்

திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் இளையராஜா மனமுருகி தரிசனம்

திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் இளையராஜா மனமுருகி தரிசனம்

திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் இளையராஜா மனமுருகி தரிசனம்

ADDED : மார் 17, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்; திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தரிசனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் இரண்டு மனைவிகளுடன் தனி சன்னதியில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வந்தார். அவரை, அறநிலையத்துறை இணை கமிஷனர் சிவக்குமார், துணை கமிஷனர் உமாதேவி, மேலாளர் நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அவர், கோவில் மூலவர், அம்மன், ராகு பகவான் உட்பட, அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்து, அர்ச்சனை செய்தார். கடந்த 9ம் தேதி லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனி இசையை இயற்றி, அரங்கேற்றம் செய்த, பிறகு, நாகநாத கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்ததால், இளையராஜாவுடன், வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் ஆர்வமுடன் போட்டோ எடுத்து, வாழ்த்தினர்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புறத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று, ராகு, கேது பகவான் ஒரே உருவத்தில் உள்ள சன்னதி, உள்ளிட்ட அனைத்து சுவாமிகளையும் வழிபட்டார்.

அடுத்த மாதம் ஏப்., 26ல் ராகு, கேது பெயர்ச்சி முன்னிட்டு, இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us