/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தப்பிய கொலை குற்றவாளி 10 ஆண்டுக்கு பின் கைதுதப்பிய கொலை குற்றவாளி 10 ஆண்டுக்கு பின் கைது
தப்பிய கொலை குற்றவாளி 10 ஆண்டுக்கு பின் கைது
தப்பிய கொலை குற்றவாளி 10 ஆண்டுக்கு பின் கைது
தப்பிய கொலை குற்றவாளி 10 ஆண்டுக்கு பின் கைது
ADDED : ஜன 07, 2024 01:45 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, தாமரங்கோட்டையை சேர்ந்தவர் வேலாயுதம், 49; கூட்டுறவு அங்காடியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவரது மூத்த சகோதரர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கலைச்செல்வி. தன் கணவரின் உறவினர்கள் தன்னை திட்டியதால், 2014ல் கலைச்செல்வி தற்கொலை செய்தார்.
தற்கொலைக்கு, பாலசுப்பிரமணியத்தின் தம்பி வேலாயுதம் காரணம் என நினைத்து, 2014ல் கலைச்செல்வி தம்பி பாலசந்தர், தன் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, பாலசுந்தர் ஆகியோருடன் சேர்ந்து வேலாயுதத்தை வெட்டி கொலை செய்தார்.
அதிராம்பட்டினம் போலீசார் பாலசுந்தர், கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரையை கைது செய்தனர். பாலசந்தர் வெளிநாடு தப்பி சென்று தலைமறைவானார்.
இவ்வழக்கு, 2016ல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம், பாலசந்தர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தெரிந்தது.
தனிப்படை போலீசார், நேற்று முன்தினம், பாலசந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் போலி பாஸ்போர்ட்டில் கனடா சென்று தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.