Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ ஆற்றில் சிக்கிய சிறுவனின் உடலை மீட்டது 'ட்ரோன்'

ஆற்றில் சிக்கிய சிறுவனின் உடலை மீட்டது 'ட்ரோன்'

ஆற்றில் சிக்கிய சிறுவனின் உடலை மீட்டது 'ட்ரோன்'

ஆற்றில் சிக்கிய சிறுவனின் உடலை மீட்டது 'ட்ரோன்'

ADDED : ஜூலை 02, 2025 10:16 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் உடலை மீட்க, ட்ரோன் உதவியது.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. டில்லியில் பணியாற்றுகிறார்.

இவரது மகன் சமீர், 17, தேனியில் பிளஸ் 2 படிக்கிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த சமீர், ஜூன் 29ம் தேதி, பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆற்றில் தண்ணீர் வேகம் காரணமாக சமீர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதையடுத்து, தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் வரை, சமீர் ஆற்றில் குளித்த இடத்தில் இருந்து, 5 கி.மீ., வரை தேடினர். ஆனால், பல இடங்களில் செடிகள் இருந்ததால், தேடுதலில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் ட்ரோன் நிறுவனத்தை அணுகினர். அவர்கள் ட்ரோன் வாயிலாக தேடிய போது, சிறுவன் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து, சமீரின் உடலை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தீயணைப்பு துறையினர் கூறியதாவது:

அரசு சார்பில், ட்ரோன் வசதிகளை வீரர்களுக்கு பயிற்சி அளித்தால் மிக பெரிய உதவியாக இருக்கும்.

சிறுவனை மீட்க உதவிய, 'யாழி ஏரோஸ்பேஸ்' என்ற ட்ரோன் நிறுவனத்தை அணுகிய போது, பணம் வேண்டாம் என கூறி இலவசமாக தேடி உடலை மீட்க உதவியாக இருந்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us