Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ திருஆரூரான் சர்க்கரை ஆலை 550வது நாளாக போராட்டம்

திருஆரூரான் சர்க்கரை ஆலை 550வது நாளாக போராட்டம்

திருஆரூரான் சர்க்கரை ஆலை 550வது நாளாக போராட்டம்

திருஆரூரான் சர்க்கரை ஆலை 550வது நாளாக போராட்டம்

ADDED : ஜூன் 02, 2024 11:17 PM


Google News
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை, 112 கோடி ரூபாயை வழங்காமல், 6,000 விவசாயிகள் பெயரில் மோசடியாக, 200 கோடி ரூபாய் கடனாக பெற்றது. ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்குச் சென்று, ஆலையும் பொது ஏலத்தில் விடப்பட்டது.

வங்கி நிர்வாகம் கடன் தொகையை கேட்டு, விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதால், 2019ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை, கால்ஸ் என்ற நிறுவனம் ஏலத்தில் குறைந்த விலைக்கு எடுத்தது.

அதன்பின், கரும்புக்கான நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 2022 நவ., 30 முதல், நேற்று வரை 550 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கரும்பு விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சரபோஜி கூறியதாவது:

ஆலை நிர்வாகம் 212 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் சார்பில், சுப்ரீம் கோர்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஐகோர்டில் புதிய வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளோம்.

ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் ஸ்டாலின், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் மகேஷ், எம்.எல்.ஏ.,க்கள் என பலரிடம், விவசாயிகள் மனு அளித்தும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us