/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணம்
ADDED : ஜூன் 05, 2024 02:52 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், வடக்கு வாசல் பகுதியில் உள்ள சுண்ணாம்புக்காளவாய் சாலையைச் சேர்ந்தவர் மெய்யழகன், 43; கட்டடத் தொழிலாளி. இவர், கட்டட வேலை இல்லாத நேரத்தில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலைக்கு செல்வார்.
இவரது மனைவி மல்லிகா, 33. இவர்களுக்கு இரு மகள்களும், மகனும் உள்ளனர். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மல்லிகா தன் குழந்தைகளுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் மெய்யழகன் மட்டும் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 2ம் தேதி இரவு சைக்கிள் ஸ்டாண்டுக்கு வேலைக்கு சென்று, இரவு வீட்டுக்கு வந்த மெய்யழகன், வீட்டில் படுத்து துாங்கியவர் நேற்று முன்தினம் காலை எழுந்திருக்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வந்து பார்த்த போது மெய்யழகன் இறந்து கிடந்தது தெரிந்தது.
இது குறித்து சிவகங்கையில் இருந்த மல்லிகாவுக்கு தகவல் அளித்தனர். ஊருக்கு திரும்பி வந்த மல்லிகா, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதையடுத்து, நேற்று மெய்யழகன் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லும் போது, மல்லிகாவும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
உடன் அவரை, கரந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை தொடர்ந்து தாயும் இறந்ததை அறிந்த குழந்தைகள் கதறி அழுதனர்.