/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ மதுவுக்கு எதிரான போராட்டம் மது கேட்டு கெஞ்சிய 'குடி'மகன் மதுவுக்கு எதிரான போராட்டம் மது கேட்டு கெஞ்சிய 'குடி'மகன்
மதுவுக்கு எதிரான போராட்டம் மது கேட்டு கெஞ்சிய 'குடி'மகன்
மதுவுக்கு எதிரான போராட்டம் மது கேட்டு கெஞ்சிய 'குடி'மகன்
மதுவுக்கு எதிரான போராட்டம் மது கேட்டு கெஞ்சிய 'குடி'மகன்
ADDED : ஜூன் 23, 2024 04:26 PM

தஞ்சாவூர்:கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி, 50க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்தை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், காமராஜ் சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் இருந்து மதுபானங்களை, 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் வாங்கி வந்தனர்.
மோரி வாய்க்காலில், 'கள்ளக்குறிச்சி சம்பவத்தை பொறுப்பேற்று தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்; போதை பொருட்களை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக் கடையை மூட வேண்டும்' என கோஷமிட்டவாறு, மதுவை ஊற்றினர்.
அப்போது, மது பாட்டிலில் இருந்து மதுவை கீழே கொட்டுவதை பார்த்த 'குடி'மகன் ஒருவர், கீழே கொட்டுவதற்கு பதிலாக என்னிடம் கொடுங்கள் என, நீண்ட நேரமாக கட்சியினரிடம் மன்றாடினார். கொட்டிய மதுவை கையில் வாங்கி குடிக்கத் துவங்கினார்.
இதையடுத்து அங்கிருந்த சிலர், 'இவர் போன்ற நபர்களை திருத்த முடியாது' என தலையில் அடித்துக் கொண்டனர்.