Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ மொஹரம் பண்டிகையை கொண்டாடிய ஹிந்துக்கள் 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து வழிபாடு

மொஹரம் பண்டிகையை கொண்டாடிய ஹிந்துக்கள் 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து வழிபாடு

மொஹரம் பண்டிகையை கொண்டாடிய ஹிந்துக்கள் 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து வழிபாடு

மொஹரம் பண்டிகையை கொண்டாடிய ஹிந்துக்கள் 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து வழிபாடு

ADDED : ஜூலை 17, 2024 10:23 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதுார் கிராமத்தில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, 10 நாட்களுக்கு விரதம் இருந்து, ஊரின் மையப்பகுதியான செங்கரையில், உள்ளங்கை போன்ற உருவத்தை, 'அல்லா சுவாமி' என வைத்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, வழிபாடு நடத்தினர்.

அதன்படி, இந்தாண்டு கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக விரதம் இருந்து நேற்று முன்தினம் இரவு, உள்ளங்கை உருவத்திற்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து சென்றனர். வீடுகளில் உள்ள மக்கள், வழிபட்டனர்.

பிறகு, நேற்று காலை, கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு, அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டார். மீண்டும், செங்கரையில் உள்ள சாவடிக்கு வந்ததும், அல்லா சாமியை துாக்கி வரும் நபர்கள் முதலில் தீயில் இறங்கினர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது;

எங்கள் கிராமத்தில் ஹிந்துக்கள் அதிகம் இருப்பதால், ஹிந்து முறைப்படியே வீதியுலா, தீக்குண்டம் இறங்குவது போன்ற வழிபாட்டை பின்பற்றுகிறோம். எங்கள் கிராமத்தில் பிறந்த பெண்கள் அனைவரும், மொஹரம் திருவிழாவின் போது, வெளியூரில் இருந்தாலும், பிறந்த வீட்டுக்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். 300 ஆண்டுகளாக, மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், இந்த விழாவை கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us