/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ 5 மாத ஆண் குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு 5 மாத ஆண் குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு
5 மாத ஆண் குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு
5 மாத ஆண் குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு
5 மாத ஆண் குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு
ADDED : ஜூன் 11, 2024 08:45 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் ரயில்வே ஸ்டேஷனில், ஆந்திராவை சேர்ந்த திலீப், 26, அவரது மனைவி ஷோபா, 21, தங்களின் ஐந்து மாத ஆண் குழந்தை மணிகண்டாவுடன் ரயிலில் கீ செயின் விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் துாங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு அருகில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணாததால் ஷோபா, திலீப் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பின், ரயில்வே ஸ்டேஷன் முழுதும் தேடினர்.
குழந்தை கிடைக்காதால் உடனடியாக பூதலுார் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல இடங்களில் தேடினர். அப்போது, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, அரை கிலோ மீட்டர் துாரத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.