ADDED : ஜூன் 19, 2025 02:43 AM
இளைஞர் தற்கொலை
சிவகங்கை: ராமநாதபுரம் கிழக்கு ரத வீதி கருணாநிதி மகன் விக்ரம்ராஜ் 33. இவர் சிறு வயதில் பெற்றோர் இறந்ததால் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள சித்தப்பா நாகேந்திரன் வீட்டில் வளர்ந்து வந்தார். கல்லுாரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு துாக்க மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் துாக்கிட்டு இறந்தார். நாகேந்திரன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* நாச்சியாபுரம்: டுவிக்கோட்டை கீழையூரைச் சேர்ந்த தென்னரசு மகன் பாபு38. இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரிந்தது. அருகில் அவரது டூ வீலர் நிறுத்தப்பட்டிருந்தது. நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்மாயில் மூழ்கி பெண் பலி
நாச்சியாபுரம்: திருப்புத்துார் மருதங்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் நாகஜோதி25. இவர் நேற்று மருதங்குடி சுரண்டக்கண்மாய் அருகில் விறகு பொறுக்கியுள்ளார். பின்னர் கண்மாயில் இறங்கியுள்ளார். அதிலுள்ள வெட்டுப்பள்ள ஆழத்தில் இறங்கி தவித்துள்ளார்.தூரத்திலிருந்த பார்த்த பெண் காப்பாற்ற செல்வதற்குள் கண்மாயில் மூழ்கி இறந்து விட்டார். தீயணைப்புத்துறையினர் நாகஜோதி உடலை கண்மாயிலிருந்து மீட்டனர். நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.