/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கல்லல்- - காரைக்குடி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களால் விபத்து அபாயம் கல்லல்- - காரைக்குடி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களால் விபத்து அபாயம்
கல்லல்- - காரைக்குடி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களால் விபத்து அபாயம்
கல்லல்- - காரைக்குடி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களால் விபத்து அபாயம்
கல்லல்- - காரைக்குடி நெடுஞ்சாலையில் கருவேல மரங்களால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 19, 2025 02:44 AM

காரைக்குடி: கல்லல்- காரைக்குடி நெடுஞ்சாலையில் பராமரிப்பின்றி வளர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடியில் இருந்து கல்லல் காளையார்கோயில் பரமக்குடி சிவகங்கைக்கு தினமும் ஏராளமான மக்கள், பஸ்சிலும்,இருசக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணியும், பாலம் அமைக்கும் பணியும் நடந்தது. தொடர்ந்து சாலைகள் பராமரிப்பின்றி கிடப்பதால், கல்லல் நெடுஞ்சாலை ஓரங்களில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் காயமடைகின்றனர். ஆபத்தான வளைவுகளில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்களும் தெரிவதில்லை. நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.