/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மனைவி கண்டிப்பு தொழிலாளி தீக்குளிப்பு மனைவி கண்டிப்பு தொழிலாளி தீக்குளிப்பு
மனைவி கண்டிப்பு தொழிலாளி தீக்குளிப்பு
மனைவி கண்டிப்பு தொழிலாளி தீக்குளிப்பு
மனைவி கண்டிப்பு தொழிலாளி தீக்குளிப்பு
ADDED : ஜூன் 13, 2025 11:53 PM
சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து இறந்தார். தேனம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி மகன் சண்முகம் 38, சமையல் தொழிலாளி. இவருக்கு மனைவி 3 மகன்கள் உள்ளனர்.
மது அருந்தும் பழக்கம் உள்ள நிலையில் ஓராண்டாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மீண்டும் மது அருந்தி வந்ததை தொடர்ந்து மனைவி கண்டித்துள்ளார். நள்ளிரவில் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி சண்முகம் தீ வைத்துக் கொண்டார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி இறந்தார். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.