ADDED : பிப் 24, 2024 05:02 AM
காரைக்குடி : திருவேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. திருவேலங்குடி மாலையிட்டான்பட்டி இளைஞர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் இளைஞர்களால் ரூ.1 லட்சம் மதிப்பிலான டைல்ஸ் பதிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடந்தது.
மேலும் லண்டன் வாழ் தமிழர் சேவா குழுமம் ராமநாதன் சார்பில் ரூ.1. 75 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஊராட்சி தலைவர் முருகப்பன் தலைமைேயற்றார்.
தேவகோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமரன், சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் பரிமளம், சாலி ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசு, பள்ளி மேலாண்மை குழு தலைவி ராமு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி சித்ராதேவி தலைமையாசிரியை மணிமேகலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.