ADDED : செப் 22, 2025 03:42 AM
காளையார்கோவில் : காளையார்கோவில் புனித அருளானந்தர் சர்ச்சில் சபை ஆண்டு விழா நடந்தது. முதன்மை பணியாளர் ஆரோக்கிய சாமி தலைமை வகித்தார். பங்குதந்தை சேசு முன்னிலை வகித்தார். கிளை துணை பணியாளர் ஆரோக்கிய லுாயிஸ் லெவே வரவேற்றார். கிளை முதன்மை பணியாளர் ஆரோக்கியசாமி அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் பால் ஜோசப் வரவு செலவு அறிக்கை வாசித்தார். உதவி பங்கு தந்தை நிக்கோலஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மத்திய சபை செயலாளர் அலெக்சாண்டர், பொருளாளர் அமிர்தசாமி, வட்டார சபை முதன்மை பணியாளர் அருள், செயலாளர் அருள்தாஸ், உச்சானி கிளை முதன்மை பணியாளர் மாரிக்கண்ணு வாழ்த்துரை வழங்கினார்.
மத்திய சபை முதன்மை பணியாளர் பெர்னாட்ஷா சிறப்பு வகித்தார். பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தணிக்கையாளர் டேனியன் ஜோசப் நன்றி கூறினார். திட்ட அலுவலர் செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.