ADDED : ஜன 07, 2024 04:25 AM

இளையான்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டி காரைக்குடியில் நடைபெற்றது.இதில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி மாணவர்கள் 2ம் பரிசு பெற்றனர். மேலும் இக்கல்லுாரி மாணவர்கள் 5 பேர் தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டியில் பங்கு பெற தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜ்முதீன், வெற்றி ஆகியோரை ஆட்சிக்குழுவினர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.