/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிடப்பில் துணை மின் நிலைய பணி கிராம மக்கள், விவசாயிகள் வேதனை கிடப்பில் துணை மின் நிலைய பணி கிராம மக்கள், விவசாயிகள் வேதனை
கிடப்பில் துணை மின் நிலைய பணி கிராம மக்கள், விவசாயிகள் வேதனை
கிடப்பில் துணை மின் நிலைய பணி கிராம மக்கள், விவசாயிகள் வேதனை
கிடப்பில் துணை மின் நிலைய பணி கிராம மக்கள், விவசாயிகள் வேதனை
ADDED : ஜூன் 07, 2025 12:18 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலைய பணிகளால் கிராமமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை துணை மின் நிலைய தொகுப்பிலிருந்து தெற்கு சந்தனுார், தெ.புதுக்கோட்டை, மேலநெட்டூர், கீழநெட்டூர் சுற்று வட்டார கிராம
பகுதிகளுக்கும், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள முனைவென்றி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் கிராம மக்களும், விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது இப்பகுதி மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நல்லாண்டிபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டு இடமும் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் பொறுப்பேற்ற தி.மு.க., ஆட்சியிலும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் நல்லாண்டிபுரத்தில் விரைவில் துணை மின் நிலையம் ஏற்படுத்தப்படும் என்றனர். ஆனால் இன்றுவரை துணை மின் நிலையம் அமைக்க எவ்வித பணிகளும் துவங்காமல் இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.