/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!
3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!
3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!
3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் கொட்டுமாம்!
ADDED : ஜன 07, 2024 01:18 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜன.,07) 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.