/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு விவசாயிகள் அச்சம்திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு விவசாயிகள் அச்சம்
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு விவசாயிகள் அச்சம்
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு விவசாயிகள் அச்சம்
திருப்புவனத்தில் வெம்பா பனிப்பொழிவு விவசாயிகள் அச்சம்
ADDED : பிப் 24, 2024 04:54 AM

திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் நேற்று அதிகாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை வெம்பா எனப்படும் பனிப்பொழிவு நிகழ்ந்ததால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாசியில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம், ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேற்று திருப்புவனம் நகர்ப்பகுதி, நான்கு வழிச்சாலை, அகலரயில்பாதை உள்ளிட்ட இடங்களில் அடர்த்தியான பனிப்பொழிவு காணப்பட்டது.
எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியவில்லை. நான்கு வழிச்சாலையில் காலை எட்டு மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே மெதுவாக சென்றன. விவசாயி முத்துப்பாண்டி கூறுகையில்: மாசியில் பெய்யும் பனியால் விவசாயத்திற்கு அதிகமாக பாதிப்பு ஏற்படாது.
நெல் அறுவடை செய்த வயல்களில் கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றை பயிரிடுவது வழக்கம்.
வெம்பா பனிப்பொழிவால் பூக்கள் கருக தொடங்கி விடும், தென்னை மரங்களில் குரும்பை உதிர்ந்து விடும், எனவே அறுவடை தாமதமாகும், மேலும் வெம்பா பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் இந்தாண்டு கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை, என்றார்.
வெம்பா பனிப்பொழிவு காரணமாகமதுரை- - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நேற்று மெதுவாக சென்றது.