ADDED : ஜூன் 10, 2025 01:30 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. உற்ஸவ மூர்த்தி முருகனுக்கு அபிஷேக அலங்காரத்தை தொடர்ந்து சண்முகார்ச்சனை நடைபெற்றது.
சவுபாக்ய துர்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முத்துக்குமார சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டு ஒரு வாரம் சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. விசாக நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.
ராம்நகர் பாலமுருகன் கோயிலில் பால விநாயகரை தொடர்ந்து பாலமுருகனுக்கு பூஜைகள் நடந்தன.
தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன.