ADDED : ஜன 11, 2024 04:07 AM
கண்டவராயன்பட்டி, : இளையாத்தங்குடி கருவேம்புச்சிலை அய்யனார்கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 4 பேர் காயம் அடைந்தனர்.
இளையாத்தங்குடி கண்மாயில் நேற்று காலை 10:00 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு துவங்கியது. அதில் 13 காளைகள் பங்கேற்றன. 9பேர் கொண்ட 13 குழுவினர் பங்கேற்றனர்.
மாடு பிடிக்க முயன்ற 4 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர். அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடந்ததால், கண்டவராயன்பட்டி போலீசார் ஏற்பாடு செய்த குழுவினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.